ஈரோடு: சோளப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிட்ட விவசாயி கைது


ஈரோடு: சோளப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிட்ட விவசாயி கைது
x

ஈரோடு அருகே புறம்போக்கு நிலத்தில் சோளப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம் கடம்பூர்

மலை பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கேர்மாளத்தை அடுத்துள்ள அத்தியூர் பகுதியை சேர்ந்த மாதன் (77) தனது விவசாய நிலத்துக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சோளப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு பயிரிடப்பட்டிருந்த 496 கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த மாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் விவசாயி மாதனுக்கு கஞ்சா விதை கிடைத்தது எப்படி என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு தோட்டங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story