விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது 39). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அவர் மனைவி மற்றும் பிள்ளைகளை சரிவர கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக அவரது பிள்ளைகள் அவருடன் பேசாமல் இருந்துள்ளனர். மேலும் அவர், தனது நிலத்தில் கொட்டகை அமைத்து தனியே தங்கியும் வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிக மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story