விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

குளித்தலையில் விவசாயி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார்.

கரூர்

விவசாயி

கிருஷ்ணராயபுரம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த்தன் என்பவரது மகன் தர்மேந்திரன் (வயது 38). விவசாயியான இவர் ஆர்.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு காருண்யா (12), தருண் (10) என்ற பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்யா தனது கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மேந்திரன் தனது மாமனார் வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது மாமனார் அவரை வீட்டை விட்டு வெளியே சென்று விடும்படி கூறியதால் அவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்தநிலையில் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தர்மேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சத்யா குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்கொலை

இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் சத்யா மற்றும் தர்மேந்தினை அழைத்து விசாரணை நடத்தி அவர்களுக்கு அறிவுரை கூறி நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் போலீசார் விசாரணை முடிந்து தனது வீட்டிற்கு சென்ற நிலையில் தனது மகன் விஷ மருந்து குடித்து விட்டார் என்று சித்தார்த்தனுக்கு அவரது உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சித்தார்த்தன் குளித்தலை பகுதிக்கு வந்த பொழுது தர்மேந்திரனை அவரது மாமனார் மனோகரன், மைத்துனர் ராஜா ஆகியோர் தனி காரில் ஏதோ ஒரு தனியார் மருத்துவமனைக்கு முதலில் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது தர்மேந்திரன் இறந்துவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது தொடர்பாக மகனின் மாமனார் மற்றும் மைத்துனரை விசாரிக்க வேண்டும் என சித்தார்த்தன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story