விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசன் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது மாமியார் ஊரில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் சிற்றரசன் சென்று இருந்தார். அப்போது அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சிற்றரசன் தனது வீட்டிற்கு வந்து வயலுக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிற்றரசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.