தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கீரனூர்:
கீரனூர் அருகே பசுமலைபட்டியை சேர்ந்தவர் ராசு. இவரது மகன்கள் அன்பழகன் (வயது 37). விவசாயி. இவரது தம்பி சுரேஷ். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் ஊர் பஞ்சாயத்தார் பேசி முடிவு செய்தனர். இதனை அன்பழகன் ஏற்றுக்கொள்ளாமல் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் உடலை மீட்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்பழகன் மனைவி சுசீலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.