அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு


அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு
x

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி இறந்தார்.

திருவாரூர்

திருமக்கோட்டை அருகே உள்ள மான்கோட்டைநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கதிர் (வயது59). விவசாயி. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளராக இருந்தார். இவர் வயலில் மாடு மேய்த்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை எதிர்பாராதவிதமாக இளங்கதிர் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story