விவசாயி சாவு


விவசாயி சாவு
x

களம்பூர் அருகே விவசாயி திடீரென உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த முக்குறும்பை காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 60), விவசாயி. இவர், கடந்த 27-ந்தேதி வைக்கோலை எரித்துள்ளார். அப்போது பக்கத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் தீப்பற்றி எரிந்ததால் அதை அணைக்க சென்றுள்ளார். அங்கு புகையால் சுவாச பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story