மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
பட்டுக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி வடக்கு தெருவைச்சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் அந்தோணி அமல்ராஜ் (வயது 32). விவசாயி. நேற்றுமுன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் தஞ்சை ரோட்டில் கரம்பயம் தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டாம்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் தலையில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் அந்தோணிசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.