மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி இறந்தார்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே வாண்டையான்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 57). விவசாயியான இவர், தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் சாலை ஓர பள்ளத்தில் விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கராஜ் ேமாட்டார் சைக்கிளுடன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தாரா? அல்லது வாகனம் எதும் மோதியதில் பள்ளத்தில் விழுந்தாரா? என்பது உள்பட பல்ேவறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.