விவசாயி வீட்டில் தீ விபத்து


விவசாயி வீட்டில் தீ விபத்து
x

விவசாயி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி


ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஒன்றியம் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரி மகன் பன்னீர்செல்வம் (வயது 40). விவசாயி. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, சமையல் செய்து கொண்டிருந்த போது, சிலிண்டர் இணைப்பில் இருந்து வந்த குழாய் தீ பிடித்து எரிந்தது.

உடன் அக்கம்பக்கத்தினர் ஈர சாக்கை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதனிடையே சம்பவம் பற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story