காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம்


காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம்
x

காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.

திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 68), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் இருந்த போது அந்த வழியாக சென்ற காட்டெருமை அவரை முட்டித்தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த வெள்ளையனை அவரது குடும்பத்தினர் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் படுகாயம் அடைந்த வெள்ளையனை சந்தித்து ஆறுதல் கூறினர். போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பாராட்டினார்.


Next Story