மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:47 PM GMT)

சாததான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த விவசாயிஇறந்து போனார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் கரையாளன் குடியிருப்பு தெருவைச் சேர்ந்த தேவதாஸ் செல்லத்துரை மகன் சுதாகர் சகாயகுமார் (வயது 51). பள்ளக்குறிச்சி தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் மகள் அண்டோ ராஜ நினுசாவை(20) அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

சாத்தான்குளம் அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த சகாயகுமாரின் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் சாத்தான்குளம் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சகாயகுமார், அவரது மகள் நினுசா, மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த விவசாயி மாடசாமி, செல்லையா(58) ஆகியோர் பலத்த காயமைடந்தனர். இந்த 4 பேரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சுதாகர் சகாயகுமார், மாடசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாடசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story