ஆட்டோ மோதி விவசாயி பலி


ஆட்டோ மோதி விவசாயி பலி
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ மோதி விவசாயி பலியானார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 45). விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணன் கோவில் ரோட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஆட்டோ, அழகர்சாமி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அழகர்சாமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவா் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story