அரசு பஸ் மோதி விவசாயி பலி


அரசு பஸ் மோதி விவசாயி பலி
x

மொபட் மீது அரசு பஸ்மோதி விவசாயி பலியானார்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகேயுள்ள தவசிமடையை சேர்ந்தவர் சவரியார் (வயது 50). விவசாயி. நேற்று இரவு இவர், நொச்சியோடைப்பட்டி அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே சாணார்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், மொபட் மீது மோதியது. இதில் சவரியார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சாணார்பட்டி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story