லாரி மோதி விவசாயி பலி
லாரி மோதி விவசாயி பலியானார்.
சேலம்
சங்ககிரி:-
சங்ககிரி அருகே இடையபட்டி வடுவன்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 67). விவசாயி. இவர் நேற்று மதியம் 1.30 மணியளவில் வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டரில் வி.என்.பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது, சங்ககிரி நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அத்தியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story