லாரி மோதி விவசாயி பலி


லாரி மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 20 Jan 2023 1:00 AM IST (Updated: 20 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி விவசாயி பலியானார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் அருகே தேவீரபள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 55). விவசாயி. இவர் ஓசூரில் சித்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வந்தார். மொபட்டில் நேற்று முன்தினம் பாகலூர் அருகே சர்ஜாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற லாரி, மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக பாகலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story