லாரி மோதி விவசாயி பலி


லாரி மோதி விவசாயி பலி
x

லாரி மோதி விவசாயி உயிரிழந்தார்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள இருங்களூரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி(வயது 58). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு தோட்டத்தில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் கைகாட்டி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாபானு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேளாங்கண்ணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரை சேர்ந்த பிரபாகரனை(33) கைது செய்தனர்.


Next Story