வாகனம் மோதி விவசாயி பலி


வாகனம் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 13 Feb 2023 11:16 PM IST (Updated: 14 Feb 2023 3:58 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி விவசாயி பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அதிபெரமனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60), விவசாயி. இவர், நேற்று ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக சண்டியூர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென அவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story