விவசாயி கொலை வழக்கு இரட்டை சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை


விவசாயி கொலை வழக்கு  இரட்டை சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை
x

விவசாயி கொலை வழக்கில் இரட்டை சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோா்ட்டு தீாப்பு அளித்துள்ளது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு காட்டு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் தண்டபாணி (வயது 54). இவருடைய தம்பி ராமச்சந்திரன் (54). இரட்டை சகோதரர்கள் ஆவார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி இரவு தண்டபாணிக்கும், அவரது தம்பி ராமச்சந்திரனுக்கும், இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது, இதை பார்த்த உறவினர் பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாறு (76) என்பவர் தகராறை விலக்கி விட முயன்றார்.

அப்போது, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தகராறுக்கு நீ தான் காரணம் என்று கூறி, அய்யாறுவை, செங்கல்லால் தாக்கினர். காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள்தண்டனை

இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி செம்மல் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தண்டபாணி, ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.


Next Story