விவசாயி கழுத்தை அறுத்த மகன் கைது


விவசாயி கழுத்தை அறுத்த மகன் கைது
x

ஒரத்தநாடு அருகே விவசாயி கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது60). விவசாயி. இவருக்கும் இவரது மகன் கங்காதரனுக்கும் (23) இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது கங்காதரன் தந்தை பெருமாளின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெருமாள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கங்காதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story