விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

தேனி

கம்பம் சி.எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (வயது 45). விவசாயி. இவர், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவிலலை. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் விஜய் ஆனந்த் மற்றும் அவரது தாய் உதயராணி மட்டும் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் இரவு உதயராணி உணவு கொடுத்து விட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் அவர் எழுந்து வந்தபோது ஊஞ்சல் சங்கிலியில் விஜய் ஆனந்த தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் விஜய் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story