விவசாயி தற்கொலை
தர்மபுரி
காரிமங்கலம்:-
காரிமங்கலத்தை அடுத்த கும்பாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50), விவசாயி. இவருக்கு சந்திரா என்ற மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை தொடர்பாக முருகேசன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. நேற்று காலையில் வீட்டில் இருந்த போது பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் முருகேசனை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் முருகேசன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story