பருத்தி செடிகளை வெட்டி அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்


பருத்தி செடிகளை வெட்டி அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதியில் சீசன் முடிந்ததையொட்டி பருத்தி செடிகளை வெட்டி அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய தேரிருவேலி, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், கருமல் ஆலங்குளம், பூசேரி, செங்கற்படை கீழத்தூவல், மிக்கேல்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் பருத்தி விவசாயம் நடைபெற்று வந்தது.

தற்போது பருத்தி சீசன் முழுமையாக முடிந்து விட்டது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் பூச்சி தாக்குதலாலும் மழை பெய்யாததாலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதோடு விலையும் குறைந்து விட்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக கடந்த ஆண்டு 1 கிலோ பருத்தி ரூ.120 வரை விலை போன நிலையில் இந்த ஆண்டு ரூ.50-க்கு மட்டுமே விலை போனது. விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தற்போது அறுவடை முடிந்ததையொட்டி பருத்திச்செடிகளை விவசாய நிலங்களில் இருந்து முழுமையாக வெட்டி அகற்றி அதை தீ வைத்து கொளுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் அந்த விவசாய நிலங்களில் ஆவணி மாதம் பிறந்த பிறகு டிராக்டர் மூலம் ஏர் உழுது அதன் பின்னர் மீண்டும் பருத்தி விதைகளை தூவி விவசாயத்தை தொடங்க உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story