ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் மடியேந்தி போராட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் மடியேந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குஅமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கமல்ராம், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடந்த 2021- 22-ம் ஆண்டு உளுந்து பயிர் காப்பீட்டுத் தொகையை 100 சதவீதம் வழங்க வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கர் ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story