விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகள் பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டுகோள்


விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகள் பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
x

விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகள் பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் வட்டாரத்திற்கு 27 ஆயிரத்து 500 வீதம் 6 வட்டாரங்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் செம்மரம், ஈட்டி மரம், குமிழ் தேக்கு, வேங்கை, மகாகனி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு வரப்பு ஓரமாக நட ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், ஒரு ஏக்கர் பரப்பு முழுவதும் நட ஏக்கருக்கு 200 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும். இக்கன்றுகளை பெறுவதற்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். உழவன் செயலியில் முன்பதிவு செய்வதற்கு இடுபொருள் சேவையை தேர்வு செய்து, அதில் இலவச மரக்கன்று முன்பதிவு என்ற பகுதியில் விவசாயி செல்போன் எண், மாவட்டம், வட்டாரம், கிராமம், விவசாயின் பெயர், பாலினம், சமூக நிலை, ஆதார் எண், வங்கி கணக்கு எண், சர்வே எண், பரப்பு, தேவைப்படும் மரங்கள், தனி பயிர் அல்லது வரப்பு பயிர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கத்தில் விவசாய நிலங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ள மரக்கன்றுகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story