மயிலாடுதுறையில் இருந்து டெல்லிக்கு விவசாய சங்கத்தினர் பயணம்


மயிலாடுதுறையில் இருந்து டெல்லிக்கு விவசாய சங்கத்தினர் பயணம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 5-ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து ரெயில் மூலம் விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு புறபட்டு சென்றனர்.

மயிலாடுதுறை

வருகிற 5-ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து ரெயில் மூலம் விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு புறபட்டு சென்றனர்.

டெல்லியில் போராட்டம்

அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் சேர்ந்து விவசாய விலைபொருட்களுக்கு லாபகரமான விலை கேட்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். 60 வயது பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், வேலையின்மைக்கு எதிராகவும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் டெல்லியில் வருகிற 5-ந் தேதி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ரெயில் மூலம் பயணம்

இதனையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் துரைராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ெரயிலில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களை விவசாய சங்கத்தினர் வழி அனுப்பி வைத்தனர்.


Next Story