உழவன் செயலி மூலம் விவசாயிகள் திட்டகளில் பயன்பெறலாம்
உழவன் செயலி மூலம் விவசாயிகள் திட்டகளில் பயன்பெறலாம் என்று வேளாண்மை அதிகாரி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறைமூலம் உழவன் செயலி என்ற செயலி உருவாக்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த செயலியின் முகப்பு அலைபேசியில் 22 சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான 22 வகையான சேவைகள் இந்த உழவன் செயலி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், இந்த துறைகளின் மூலம் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இடுபொருட்களின் தேவையை மானிய விலையில் பெற்று பயன்பெறவும் இந்த செயலி வாயிலாகவே தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்த செயலின் மூலம் பயிர் காப்பீடு, உரம் மானியம்் விதைகளின் இருப்பு, பூச்சி நோய் தாக்குதல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகளின் பரிந்துரைகள் வேளாண் எந்திரங்களின் இருப்பு மற்றும் வாடகை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இருவிதமான கைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த செயலியை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களையும் தொடர்புக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.