தரமற்ற விதை குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்


தரமற்ற விதை குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்
x

தரமற்ற விதை குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என விதை ஆய்வு தணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் தற்பொழுது தயாராகி வருகிறார்கள். விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் ரகங்கள் விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ, முளைப்புத்திறனில் குறைபாடுகளோ இருந்தால் அது தொடர்பாக 9786259111 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story