காய்கறி பயிர்கள் மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்


காய்கறி பயிர்கள் மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி பயிர்கள் மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் கூறினார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

காய்கறி பயிர்கள் மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் கூறினார்.

சவ்சவ் சாகுபடி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள கீழத்தஞ்சாவூர் ஊராட்சி பகுதியில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மலைப்பயிரான சவ்சவ் சாகுபடி நடந்து வருகிறது.

இந்த திட்டத்தில் சவ்சவ் சாகுபடி செய்து வரும் விவசாய நிலங்களை தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வருவாய் ஈட்டலாம்

டெல்டா பகுதிகளில் விவசாயிகள் நெல், பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு மாற்று பயிராக மலைப்பயிரான சவ்சவ், உருளை, ஆப்பிள் உள்ளிட்டவற்றை சோதனை அடிப்படையில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயிகள் மலைப்பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இவ்வாறு காய்கறி பயிர்களை விவசாயிகள் மாற்றுப்பயிராக சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டலாம். இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும், வியாபாரிகள் வீட்டிற்கே வந்து காய்கறிகளை எடுத்துச் செல்வதாகவும், இதனால் செலவில்லாமல் லாபம் ஈட்டி வருவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

காய்கறி பயிர்கள்

இதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் மாற்றுப் பயிராக தோட்டக்கலை காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Next Story