திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம்


திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம்
x

திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் குமுளூர் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி லால்குடி மகிழம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு தோட்டக்கலை இணை பேராசிரியர் ஈஸ்வரன் கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்டத்திற்கு ஏற்ற தரமான, அதிக விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நெல் ரகங்கள் தேர்வு மற்றும் விதை தொழில்நுட்பங்களைப் பற்றியும், நெற்பயிர் நுண்ணுயிர் பயன்பாடு பற்றியும், நெற்பயிரில் பயிர் மேலாண்மை மற்றும் சொட்டுநீர் பாசன தொழில்நுட்பங்களை பற்றியும் எடுத்து கூறப்பட்டது. இப்பயிற்சியில் பேராசிரியர்கள் ஈஸ்வரன், வினோத், செலாஸ்டின் அந்தோணி மற்றும் 50-க்கும் மேலான விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் சொட்டுநீர் பாசனத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திருச்சி பகுதி விவசாயிகள் மற்றும் சொட்டுநீர் பாசனத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண் 9597691352, 7397671849 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி நடைபெறும் தேதி மற்றும் இடம் தங்களது செல்போன் மூலம் தெரியப்படுத்தப்படும். விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story