இலுப்பையூரணியில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்


இலுப்பையூரணியில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்
x

இலுப்பையூரணியில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலுப்பையூரணியில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் தூத்துக்குடி மாவட்ட நுண்நீர் பாசன திட்ட வேளாண்மை இயக்குனர் சாந்தி ராணி, வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு தேவையான வண்டல் மண் எடுத்தல், விவசாய கடன் அட்டை பெறுதல் சம்பந்தப்பட்ட மனுக்களை பெற்றனர். முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story