விவசாயிகள்- மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
விவசாயிகள்- மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர்
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள் நீடாமங்கலம் அருகே சேரி கிராமத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். அப்போது இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் முறை குறித்து விவசாயி ராஜகோபாலன், மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த பறவைக்கூடு அமைத்தல், வேப்பிலை, நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு, எருக்கு, ஆடுதொடா உள்ளிட்டவற்றை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை, நெல்லை சேமித்து வைக்கும் முறை குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story