விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழிலதிபர் பிரகதீஸ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பூலாம்பாடி, கடம்பூர், அரசடிக்காடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டு காய்கறி பயிரிடுவதால் கிடைக்கக்கூடிய வருவாய்கள், மானியம் பெறும் வழிவகைகள், விதை நேர்த்தி செய்வது, சரியான முறையில் விற்பனை செய்வது குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். மேலும் பல்வேறு வகையான காய்கறிகளை உற்பத்தி செய்து சேலம் மாவட்டம் தலைவாசலில் இயங்க கூடிய தினசரி காய்கறி மார்க்கெட் போன்று பூலாம்பாடியில் அக்டோபர் மாதம் 25-ந்தேதி முதல் புதிய தினசரி காய்கறி மார்க்கெட் தொடங்கி விற்பனை செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த காய்கறி மார்க்கெட் சிறப்பாக செயல்படவும், விவசாயிகள் முழுமையாக பயன் பெறவும் அனைத்து உதவிகளையும் செய்வதாக தொழிலதிபர் பிரகதீஸ்குமார் உறுதியளித்துள்ளார்.