விவசாயிகள் ஆலோசனை கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
x

திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலஷ்மி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் பேசினார். அப்போது, அவர் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பயிர் காப்பீடு செய்வதின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

வேளாண்மை அலுவலர் செந்தில் பேசுகையில் உழவன் செயலி பதிவு செய்தல் மற்றும் பயன்பாடுகள் பற்றிய விளக்கம் அளித்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தோட்டக்கலை அலுவலர் மதுமிதா பேசுகையில், தோட்டக்கலை துறை மானியங்கள் பற்றியும் பழ மரங்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி பற்றியும் விளக்கம் அளித்தர்.

கூட்டத்தில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை விற்பனை உதவி அலுவலர் சாகித்யா மதிப்பு கூட்டு எந்திரங்கள் பற்றியும் அதன் மானிய விவரங்கள் பற்றியும் கூறினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை

வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக் மற்றும் அகல்யா செய்து இருந்தனர்.


Next Story