வாய்க்காலில் விவசாயி பிணம்


வாய்க்காலில்  விவசாயி பிணம்
x

அம்மாப்பேட்டை அருகே வாய்க்காலில் விவசாயி பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை அருகே வாய்க்காலில் விவசாயி பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள புளியக்குடி வடக்குதோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் முருகானந்தம்.( வயது 30.) விவசாயி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்ற முருகானந்தம் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

வாய்க்காலில் பிணம்

அப்போது புளியக்குடி தொட்டிபாலம் வாய்க்காலில் முருகானந்தம் பிணமாக கிடந்துள்ளார்.இதை பார்த்த அந்த பகுதியினர் புளியக்குடி கிராம உதவியாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகானந்தத்தின் உடலை மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுதொடர்பான அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் குளிக்க சென்ற போது வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story