தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி காத்திருப்பு போராட்டம் - விவசாயிகள்


தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி காத்திருப்பு போராட்டம் - விவசாயிகள்
x

கபிஸ்தலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விவசாயி நாக. முருகேசன் தலைமை தாங்கினார். இதில் நிறைவேற்றபபட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்காக பிடித்தம் செய்து வங்கிக்கு அனுப்பாமல் உள்ள கடன் தொகை முழுவதையும் தீர்த்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் கரும்பு கிரயத்தொகை மற்றும் தமிழக அரசு அறிவித்த கரும்பு பணம், வாகன வாடகை, வெட்டுக்கூலி, முழுவதையும் வட்டியுடன் சேர்த்து ஒரே தவணையில் தர வேண்டும். இல்லையென்றால் ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி தனியார் சர்க்கரை ஆலை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது.

பேச்சுவார்த்தை

சர்க்கரை ஆலை தொடர்பாக எந்த விதமான பேச்சுவார்த்தையையும் விவசாயிகள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story