குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை- விவசாயிகள்


குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை- விவசாயிகள்
x

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முன்கூட்டியே அணை திறப்பு

ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளை முழுமையாக விவசாயிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசு முன்கூட்டியே அதாவது மே மாதம் 24-ந் தேதியே மேட்டூர் அணையை திறந்தது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேளாண்துறை இலக்க நிர்ணயித்தது.

நேரடி விதைப்பு முறை

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 55 ஆயிரத்து 958 ஏக்கர் என்ற அளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 33 ஆயிரத்து 400 ஏக்கர் நேரடி விதைப்பு முறையிலும், 22 ஆயிரத்து 558 ஏக்கர் நடவு முறையிலும் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் காவிரி மற்றும் வெண்ணாறு பாசனத்துக்கு முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பல்வேறு ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் வந்து சேராத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள திருவாரூர் மாவட்ட விவசாயிகள், முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

உரவிலை உயர்வு

இதுகுறித்து விவசாயி அழகர்ராஜா கூறுகையில், 'முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையல் முறைவைத்து தண்ணீர் வழங்குவதால் விவசாயிகளுக்கு பலன் இல்லாத நிலை உள்ளது. எனவே முறை வைக்காமல் ஆறுகளில் முழுமையாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.

மேலும் டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை கடந்த ஆண்டை விட தற்போது அதிகளவு உயர்ந்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்கவும், வேண்டும். மேலும் நிபந்தனை இல்லாமல் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்' என்றார்.


Next Story