அனைவரும் பயன் அடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
அனைவரும் பயன் அடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் நடப்பு பருவத்தில் தற்போது குறுவை சாகுபடி செய்யபட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டம் மூலம் தலைஞாயிறு பகுதியில் 575 ஏக்கர் மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே குறுவை சாகுபடியில் ஈடுபடும் அனைவரும் பயன் அடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தலைஞாயிறு வட்டார விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு மாற்றாக நிலக்கடலை மற்றும் உளுந்து, பயறு சாகுபடி செய்யும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கமல்ராம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story