நிலக்கோட்டை பகுதி கண்மாய்களில் வைகை ஆற்றுநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை


நிலக்கோட்டை பகுதி கண்மாய்களில் வைகை ஆற்றுநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
x

நிலக்கோட்டை பகுதி கண்மாய்களில் வைகை ஆற்று நீரை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கும் நீராதாரமாக உள்ள வைகை அணை நிரம்பியதை அடுத்து அணையின் மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணையில் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சென்றாலும் நிலக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய் பகுதிக்கு தண்ணீர் வரத்து இல்லை என அப்பகுதி விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். எனவே வைகை ஆற்று நீரை நிலக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story