குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

அதிகாரிகள் வராததை கண்டித்து கும்பகோணத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

அதிகாரிகள் வராததை கண்டித்து கும்பகோணத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கூட்ட அரங்கிற்கு வந்து இருந்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் இளங்கோவன் மற்றும் ஒரு சில துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.

புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து, கூட்டத்தை புறக்கணித்து, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் இருந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் கோட்டாட்சியர் அது தொடர்பான பணிகளுக்காக சென்றுள்ளார். எனவே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முடியவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து நேற்று நடைபெற இருந்த கூட்டத்திற்குப் பதில், மற்றொரு தேதியில் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story