2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்


2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
x

2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்

திருவையாறு புறவழி்ச்சாலையை கைவிடக்கோரி 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது தலை கீழாக நின்று கோஷமிட்டனர்.

உண்ணாவிரதம்

திருவையாறு புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30-ந்தேதி தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கடந்த 2,3 ஆகிய தேதிகளில் வயல்களில் நெற்பயிர்கள் மீது மண் கொட்டுவதை கண்டித்து பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து விவசாயிகள் உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பின்னர் புறவழிச்சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. கடந்த 8-ந்தேதி தஞ்சை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து புறவழிச்சாலையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டியூரில் நேற்றுமுன்தினம் விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தலை கீழாக நின்றனர்

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தலைகீழாக நின்று புறவழிச்சாலை அமைப்பதை கைவிட வேண்டும். இத்திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.


Next Story