திருப்பத்தூரை சேர்ந்த விவசாயிகள் கேரளாவுக்கு பயணம்


திருப்பத்தூரை சேர்ந்த விவசாயிகள் கேரளாவுக்கு பயணம்
x
தினத்தந்தி 30 Nov 2022 6:26 PM IST (Updated: 30 Nov 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கேரளா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவடட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கேரளா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

கேரளாவுக்கு...

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 20 விவசாயிகள், கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் தென்னை மற்றும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்துக்கு சென்றனர். கலெக்டர் அமர்குஷ்வாஹா, அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தனி வாகனம் மூலம் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை எனும் ஆத்மா திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகளை வெளிமாநிலங்களுக்கு அழைத்து சென்று வேளாண்மை தோட்டக்கலை பயிர்கள், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் தொடர்பான வேளாண்மை விஞ்ஞானிகளால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

7 நாட்கள் பயணம்

அதன்படி, கந்திலி வட்டாரத்தில் இருந்து 10 விவசாயிகள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய வட்டாரங்களில் இருந்து 10 விவசாயிகள் என மொத்தம் 20 விவசாயிகள் கேரளா மாநிலம் காசர்கோடு என்ற பகுதியில் செயல்பட்டு வரும் தென்னை மற்றும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்துக்கு செல்ல உள்ளனர். இந்த பயணம் 7 நாட்கள் கொண்டதாகும்.

இப்பயிற்சியில், தென்னை அறுவடை சார்ந்த தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல், விற்பனை தொடர்பாக உயர் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். இதுதொடர்பாக தலைவர் மற்றும் பேராசிரியர் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி மையத்தில் முன் அனுமதி பெற்று தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பச்சையப்பன், வேளாண்மை வணிகத்துறை இயக்குனர் செல்வராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திமா, வேளாண்மை உதவி செயற் பொறியாளர் ஆனந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அப்துல்ரகுமான், ஆத்மா திட்ட மேலாளர் வினோத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story