விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:45 AM IST (Updated: 24 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிவகாசி தாலுகாவில் உள்ள ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் என்பவர் ஈஞ்சார் கிராமத்தில் உலர் களம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நாகூர் என்பவர் இடையன்குளம் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை வைத்தார்.

படிக்காசு வைத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி அப்பகுதியில் உலர் களம் அமைக்க வேண்டும் என்றார்.

ஆக்கிரமிப்பு

ராஜபாளையம் தாலுகாவை சேர்ந்த ராமச்சந்திர ராஜா என்பவர் வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தில் உரம் இருப்பு விவரத்தினை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தெரியும்படி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அம்மையப்பன் என்பவர் வேப்பங்குளம் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.

இதற்கு பதில் அளித்த ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் வருகிற 28-ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆர்.டிஓ. நேர்முக உதவியாளர் ஆனந்தராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் செந்தில்குமார், வத்திராயிருப்பு தாசில்தார் முத்துமாரி, சிவகாசி துணை தாசில்தார் அருளானந்தம், துணை தாசில்தார் அகஸ்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story