விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடந்தது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் நிதிப்பயன் பெறுதலில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து நிதிப்பயன் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற்றிட நடவடிக்கைகள் எடுக்கவும், சிறப்பு முகாம் வருகிற 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகம் மூலமாக நடைபெற உள்ளது.

எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகள்

மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், வேளாண், தோட்டக்கலை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கையேடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மண்வள அட்டைகள் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையின் மூலம் ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால் ஏரிகள், பக்கக்கால்வாய்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தூர்வாரும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

குறைதீர்வு மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

மேலும் கூட்டத்தில் தனிநபர் தொடர்பான மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) மாரியப்பன், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்து துறை) சோமசுந்தரம், இணைப்பதிவாளர் (கூட்டுறவுச் சங்கங்கள்) நடராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, உதவி திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சித்துறை அருண் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story