விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் வட்டார அளவிலானவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பவுலின் தலைமையில் நடந்தது. தாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளாக தலைஞாயிறு பாஸ்கரன், கமல்ராம், தாணிக்கோட்டகம் காளிதாஸ், தகட்டூர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-வேதாரண்யம் பகுதியில் வடிகால் வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை, செடி, கொடிளை அகற்றி தூர்வார வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடன் உதவி வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை, வடிகால் வாரியம், வேளாண்மை போன்ற துறை உயர் அதிகாரிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் உள்ளனர். அடுத்த கூட்டத்திற்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் தாசில்தார் அலுவலகத்தை முடக்கி, கூட்ட அறையை பூட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதை தொடர்ந்து கோட்டாட்சியர் பவுலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசுகையில், விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டத்துக்கு வராத துறை அதிகாரிகள் மீது கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.முன்னதாக துணை தாசில்தார் வேதையன் வரவேற்றார்.


Next Story