விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. கணேசன் தலைமையில் நடைபெற்றது. அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்ட தென்பாலை கிராமத்தில் பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் கிடக்கும் கண்மாய் மடையை சரி செய்ய வேண்டும். கல்குவாரிகளிலிருந்து வரும் தூசிகளால் பயிர்கள் நாசமாகிறது. அதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அருப்புக்கோட்டை மற்றும் பாளையம்பட்டியில் உள்ள கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மீனாட்சிபுரம், நரிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். விவசாயிகள் அளித்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. கணேசன் உறுதி அளித்தார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story