விவசாயிகள் ஆர்.டி.ஓவிடம் மனு
விவசாயிகள் ஆர்.டி.ஓவிடம் மனு
தாராபுரம்,
தாராபுரம் அருகேவெறி நாய் கடிக்கு 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதை கண்டித்து
வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
தாராபுரத்தை அடுத்துள்ள மடக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தேர்பட்டி.இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பிரதான தொழிலான கால்நடை வளர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கோழி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து அதனை குண்டடம் மற்றும் கன்னிவாடி வார சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாத காலமாக விவசாயிகள் தங்கள் பட்டியில் அடைத்து வைத்திருக்கும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றி தெரியும் வெறி நாய்கள் கடித்து குதறி ஆட்டின் ரத்தத்தை குடித்து விட்டு சென்று விடுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக மணக்கடவு கிராமத்தில் வெறி நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து 200,க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை குடித்து ஆடுகளை கொன்று விடுகிறது. இன்று நாட்டுதுறை, பாலசுப்பிரமணி, அப்பு, ஆகிய நபர்களின் 10 செம்மறியாடுகளை வெறி நாய் கடித்து கொண்டுள்ளது. விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசனிடம் நாய்களைப் பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி மனு கொடுத்து முற்றுகையிட்டனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ குமரேசன் வெறி நாய்களை பிடிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து தருவதாகவும். மேலும் நாய்கள் இனப்பெருக்கத்தை குறைக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்களுக்கு கருத்தரிப்பு அறிவை சிகிச்சை செய்து நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கோழிகளை திருடும் நபர்களை கண்டறிய அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து விவசாயிகள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
-