உழவன் செயலியில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும்


உழவன் செயலியில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு திட்டங்களில் பயன்பெற உழவன் செயலியில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், கடந்த 2021-2022-ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 139 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை- உழவர் நலத்துறையில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத்துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெறுவதற்காகவும் உழவன் செயலி என்ற செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், இந்த செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறைகளின் திட்டப்பலன்களை அறிந்துகொள்ளலாம்.

முன்பதிவு செய்ய வேண்டும்

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் முன்பதிவு செய்வதால், வேளாண் துறையில் வழங்கப்படும் விதைகள், உயிர் உரங்கள், விசைத்தெளிப்பான்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் மற்றும் திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம். உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து திட்டப்பலனை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story