காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்


காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
x

மழைகாலங்களில் தண்ணீர் வீணாவதை தடுக்க காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி

மழைகாலங்களில் தண்ணீர் வீணாவதை தடுக்க காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு கலெக்டரிடம் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் கொடுத்த மனுவில், விவசாய பயிர்களை அழித்து வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 566 டி.எம்.சி. காவிரி நீர் கடலுக்கு சென்று வீணாகி உள்ளது. இதனை சேமித்து வைக்க காவிரி, கொள்ளிடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று கிராவல் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நஷ்ட ஈடு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், மழை வெள்ளத்தால் முசிறி பகுதிகளில் அழிந்து போன பயிர்களுக்கு ஒருவருடம் ஆகியும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. இதற்கு உடனே நஷ்டஈடு வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல்துறை, ஆதிதிராவிட நல துறை மூலமாக விவசாயிகளுக்கு வரும் உதவிகளை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள்

தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சின்னத்துரை கொடுத்த மனுவில், விவசாயப் பணிகளுக்கு தற்காலிகமாக 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை பணிக்கு திரும்பிட மத்திய மாநில அரசுகளின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு சென்று. உடனடி தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை.சிவ சூரியன் கொடுத்த மனுவில், காவிரி பாசன கிளை கால்வாய்களுக்கு வலது கரையில் உள்ள எலமனூர், திண்டுகரை, கொடியாலம், அம்மன்குடி, மற்றும் இடது கரையோரம் காட்டு புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சீலைபிள்ளையார்புதூர், நத்தம் ஆகிய விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க நிரந்தர கொறம்பு அணை அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story