விவசாயிகள் ஆதார் விவரங்களை நாளைக்குள் இணைக்க அறிவுறுத்தல்


விவசாயிகள் ஆதார் விவரங்களை நாளைக்குள் இணைக்க அறிவுறுத்தல்
x

விவசாயிகள் ஆதார் விவரங்களை நாளைக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13-வது தவணை பி.எம். கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை நாளைக்குள் (சனிக்கிழமை) பி.எம். கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் தோராயமாக 12 ஆயிரம் பயனாளிகள் தங்கள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 13-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கனவே ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்த பயனாளிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story